பொம்மை (பெயர்ச்சொல்)
மரம், மண் போன்றவற்றில் நிஜப் பொருள்களைப் போன்று அல்லது மனிதர், விலங்குகள் முதலியவற்றைப் போன்று சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள்.
ஒத்துப்போ (வினைச்சொல்)
தோல்வியை ஒப்புக்கொள்வது
வீரர் (பெயர்ச்சொல்)
ஒரு போராட்டத்தில் பங்கெடுத்த நபர்
பிராயச்சித்தம் (பெயர்ச்சொல்)
பாவத்துக்கு அல்லது குற்றத்துக்கு பரிகாரம்.
ஆதரவு (பெயர்ச்சொல்)
ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு உதவியாக இருக்கும் ஒத்துழைப்பு
கெஞ்சு (வினைச்சொல்)
ஒன்றைச் செய்ய வேண்டும் அல்லது செய்ய வேண்டாம் என்று இரக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கேட்டல்.
கால்நடை மருத்துவர் (பெயர்ச்சொல்)
விலங்குகளுக்கு சிகிச்சையளிப்பவர்
தனிசிறப்பு (பெயர்ச்சொல்)
மற்றவர்களிடம் அல்லது மற்றொன்றிடம் இல்லாத சிறப்பான தன்மை.
சுமை (வினைச்சொல்)
கனமான பொருட்களை தலை, முதுகு போன்ற பகுதிகளில் தாங்குதல்.
சாத்வீகம் (பெயர்ச்சொல்)
இயற்கையாகவே ஒருவரை நல்ல செயல்களையே செய்வதற்கு தூண்டும் குணம்